/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை
/
சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : மே 12, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கலையரசி, 16. இவர் கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.