/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குளு குளு' கொடைக்கானல் செல்லலாம்
/
'குளு குளு' கொடைக்கானல் செல்லலாம்
ADDED : ஏப் 21, 2024 05:24 AM

கோடை வெயில் துவங்கி விட்டது. பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் மலை பிரதேங்களை நோக்கி செல்ல துவங்கி விட்டனர். புதுச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு தினசரி செல்லும் ஆம்னி பஸ் விபரங்கள்:
1. எஸ்.பி.எம்., - இரவு 10:00
2. பர்வீன் டிராவல்ஸ் - இரவு10:15
3. எம்.எம்.எம் டிராவல்ஸ் - இரவு 9:30
4. வெற்றி டிராவல்ஸ் - இரவு 11: மணி
புதுச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாக ரயில் சேவை இல்லை. ஆனால் விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் கொடை ரோடு வரை ரயில் சேவை உள்ளது. அங்கிருந்து பஸ் மூலம் கொடைக்கானல் செல்லாம்.
சென்னையில் இருந்து தினசரி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) விழுப்புரத்தில் இரவு 12:10 மணிக்கு நின்று செல்கிறது. காலை 4:15 மணிக்கு கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தை அடைகிறது.
தினசரி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16127) விழுப்புரம் ரயில் நிலையத்தில் மதியம் 12:15 மணிக்கு நின்று செல்கிறது. இந்த ரயில் மாலை 4:48 மணிக்கு கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தை அடைகிறது. இதுதவிர சில வாராந்திர ரயில்களும் விழுப்புரம் வழியாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது.

