/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்க்காடு ஸ்காலர் பள்ளி முதலாம் ஆண்டு விழா
/
கோர்க்காடு ஸ்காலர் பள்ளி முதலாம் ஆண்டு விழா
ADDED : மார் 04, 2025 02:59 AM

புதுச்சேரி : ஸ்காலர் கல்வி குழுமத்தின், கோர்க்காடு ஸ்காலர் பள்ளி முதலாம் ஆண்டு விழா நடந்தது.
விழாவில், பள்ளி தாளாளர் சுரேஷ் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பேசுகையில், 'இப்பள்ளி, எதிர்காலத்தில் மிகப்பெரிய பள்ளியாக வரும் நம்பிக்கை உள்ளது. மாணவர்கள் ஆரம்ப கல்வி முதலே புரிந்து படித்தால், தேர்வு பயம் இருக்காது. ஆகையால், மாணவர் புரிந்து படித்து தேர்வு பயம் இல்லாமல் வர வேண்டும்' என்றார்.
அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி அளவிலும், மண்டல அளவிலும் நடந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
விழாவில், ஸ்காலர் கல்வி குழும நிர்வாக தலைவர் பழனிவேலு, துணைத் தலைவர் வசந்தி, பள்ளி செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருள், இணை பொருளாளர் பாலசுப்ரமணியன், இணை செயலாளர் குகன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நீட், ஜே.இ.இ., மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.