/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஓட்டுனர்கள் கூட்டமைப்பின் கூட்டம்
/
அரசு ஓட்டுனர்கள் கூட்டமைப்பின் கூட்டம்
ADDED : செப் 03, 2024 06:27 AM
புதுச்சேரி : அகில இந்திய அரசு ஓட்டுனர்கள் கூட்டமைப்பின் கூட்டம் டெல்லியில் நடந்தது.
டெல்லியில் உள்ள விகாஸ் பவன் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, அகில இந்திய தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சத்பால் கவுசிக், அப்துல் அமீத், முசீர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதுச்சேரி அரசு ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சேரலாதன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓட்டுனர் பதவியை தொழில்நுட்ப பதவியாக மாற்றி அமைக்க வேண்டும். ஓட்டுனர் பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாகன பராமரிப்பு நடைமுறைகளை ஆய்வு செய்து, விரைவாகவும், எளிமையாகவும், நடைமுறைப்படுத்த வேண்டும்.
15ஆண்டு ஆயுட்கால வாகனங்களை ஸ்கிராப் பாலிசி நடைமுறையை பயன்படுத்தி, புதிய வாகனங்களை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டாவது ஊதிய குழுவை அமைக்கவும், புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இத்தகவலை, புதுச்சேரி அரசு ஓட்டுனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.