/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி தேர்வு
/
காரைக்காலில் ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி தேர்வு
காரைக்காலில் ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி தேர்வு
காரைக்காலில் ஒரு நாள் கலெக்டராக அரசு பள்ளி மாணவி தேர்வு
ADDED : ஜூலை 18, 2024 05:58 AM

காரைக்கால் : காரைக்காலில் அரசு பள்ளி மாணவி ஒரு நாள் கலெக்டராக இன்று தேர்வு செய்யப்பட்டார்.
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள், பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளி மாணவர்கள் ஒருநாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என கலெக்டர் அறிவித்தார்.
இதன்படி காரைக்கால்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி லித்யா ஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவி இன்று (18ம் தேதி) கலெக்டருடன் இணைந்து பணியாற்றுவார் என்று மாவட்ட கலெக்டர் மணிகண்டன், தெரிவித்துள்ளார்.
இது மாணவர்களின் கல்விக்கான ஊக்கம் மற்றும் ஆளுமை திறனை மேம்படுத்தும் என்பதால் மாதம் இரு மாணவர்களுக்கு வாய்ப்பு
அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.