/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அரசு செயலர் ஆய்வு
/
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அரசு செயலர் ஆய்வு
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அரசு செயலர் ஆய்வு
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அரசு செயலர் ஆய்வு
ADDED : செப் 01, 2024 03:55 AM

புதுச்சேரி : குரும்பாப்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அரசு செயலர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி அரசு வேளாண்துறை செயலர் ராஜீ, குரும்பாப்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
அறிவியல் நிலைய செயல்பாடுகளை முதல்வர் விஜயகுமார், செயலருக்கு எடுத்துரைத்தார். மேலும் செயலர், திசு வளர்ப்பு கூடம், மண் மற்றும் நீர் பரிசோதனை கூடம், மனையியல் பிரிவு, காளான் வித்து உற்பத்தி மையம், மூலிகை செடி தோட்டம், தோட்டக்கலை நர்சரி, இந்திய நெல் ஆராய்ச்சி வயல்கள் மற்றும் பண்ணைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார், நிலைய வல்லுநர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.