/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.11,616 கோடியில் ஏழு திட்டங்கள் பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்
/
ரூ.11,616 கோடியில் ஏழு திட்டங்கள் பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்
ரூ.11,616 கோடியில் ஏழு திட்டங்கள் பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்
ரூ.11,616 கோடியில் ஏழு திட்டங்கள் பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்
ADDED : மார் 11, 2025 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏழு பெரிய திட்டங்கள் ரூ.11,616 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்ட தொடர் கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. இதில், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் 534 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சங்கராபரணி ஆறு அருகிலும் நகர் புறங்களிலும் கூடுதலாக 40 குழாய் கிணறுகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊசுடு, பாகூர், அபி ேஷகபாக்கம், கோர்க்காடு, வாதானுார் உள்ளிட்ட 5 ஏரிகளில் இருந்து குடிநீர் ஆதாரம் எடுக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 4,750 கோடி ரூபாயில் மத்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைத்தல், ஏற்கனவே உள்ள நீர் வழங்கல், கழிவு நீர், வடிகால் வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி பெற்று நீர் வழங்கல், கழிவு நீர், வடிகால் வசதிகளை மேம்படுத்த 3,290 கோடி ரூபாய்க்கான திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ராஜிவ்காந்தி சதுக்கம் முதல் இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் அமைப்பதற்கும், கடலுார் சாலையை 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தவும் 1000 கோடி வழங்க ஏற்றுக் கொண்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த உயர்மட்ட மேம்பாலம் திட்டம் துவங்கப்பட உள்ளது.
குடிநீர் மற்றும் விவசாய நோக்களுக்கான மேற்பரப்பு நீரை சேமிக்க 78 குளங்களை பழுதுபார்க்கவும், மீட்டெடுக்கபட உள்ளது. 750 கோடியில் மேற்கொள்ள இந்த விரிவான திட்ட அறிக்கை ஜல் சக்தி அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படும்.
புதுச்சேரி கடற்கரை திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் 1,433 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது. கழிவு நீரை தடுத்தல், புதுச்சேரி பகுதிகளுக்கு 50 எம்.எல்.டி., திறன் கொண்ட எஸ்.டி.பி., நிர்மாணித்தல், கனகன் ஏரியில் 17 எம்.எல்.டி., திறன் கொண்ட எஸ்.டி.பி., மூன்றாம் நிலை சுத்தகரிப்பு நிறுவதல், கனகன் ஏரி எஸ்.டி.பி.,யில் இருந்து முருங்கம்பாக்கம் ஏரி உபரி வரை குழாய் பதித்தல், கடலோர மண்டலத்தில் உள்ள ஆழமற்ற நீர் ஆதாரங்களை 590 கோடி ரூபாயில் ரீசார்ஜ் செய்யதல் உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்.
2024-25 ம் ஆண்டில் புதுச்சேரியில் 7 இடங்களில் சாலைகளை மேம்படுத்தல், முத்தியால்பேட்டை நீர் விநியோகம் அமைப்பு மறுசீரமைப்பு, 1 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தல் பணி 171.98 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள நபார்டு வழங்கி அனுமதித்துள்ளது. மேலும் 221 கோடி மதிப்பீட்டில் 13 திட்டங்கள் ஏற்கனவே நபார்டு வங்கிக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன என கவர்னர் குறிப்பிட்டார்.