தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து


ADDED : மே 18, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், அனைவரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய துணை ஜனாதிபதி ஜக்தீஷ் தன்கர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சிறந்த கல்வியாளரும் முதிர்ந்த அரசியல் அனுபவம் கொண்டவராகவும் இருக்கும் குடியரசு துணைத் தலைவரை நாம் பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்று. அவர் நல்ல உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருளட்டும், என, தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி மக்கள் சார்பில், பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தங்களின் சட்ட நுணுக்க அறிவு, திறமை மூலம் பாராளுமன்றத்தை பாதுகாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகிறீர்கள்.

நீண்ட காலம் ஆரோக்கியத்துடன், நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என, கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us