sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து

கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து

கவர்னர், முதல்வர் பக்ரீத் வாழ்த்து


ADDED : மே 27, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 08:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கவர்னர் கைலாஷ்நாதன் கூறியிருப்பதாவது: 

உலகம் எங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்தின் மேன்மைக்காக, நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை ஆகிய நெறிகளைப் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையை அறவழியில் அமைத்துக் கொள்ள வேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி: புனித தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை மகழ்ச்சியுடன் கொண்டாடும் புதுச்சேரி மாநில இஸ்லாமில சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தியாகம், ஈகை, இறை நம்பிக்கை ஆகிய உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் நன்னாள் இதுவாகும். இந்த புனித திருநாள் நம்மிடையே சகோதத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளர்த்து, புதுச்சேரி மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் நல்லாரோக்கியத்தை கொண்டு வரட்டும் என, வாழ்த்துகிறேன். 

இதேபோல், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, நேயம் மக்கள் கழகத்தின் தலைவர் நேரு, எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், ஜோஸ் சார்லஸ் மார்டின், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக குத்துாஸ் பங்காரு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us