/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'மிஷன் வீரமங்கை' திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
/
புதுச்சேரியில் 'மிஷன் வீரமங்கை' திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் 'மிஷன் வீரமங்கை' திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
புதுச்சேரியில் 'மிஷன் வீரமங்கை' திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மார் 08, 2025 04:35 AM

புதுச்சேரி : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 'மிஷன் வீரமங்கை' திட்டம் துவக்க விழா, புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நேற்று நடந்தது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங் கேற்று, திட்டத்தை துவக்கி வைத்து, காவல்துறையில் சிறந்து விளங்கிய 32 பெண் காவலர்களுக்கு விருது வழங்கினர்.
அமைச்சர்கள் நமச்சிவா யம், லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் மூலம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லுாரி, பள்ளிகளுக்கு பெண் போலீசார் நேரடியாக சென்று, மாணவிகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், பாலியல் சீண்டலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அசாதராண சூழ்நிலையில் மாணவிகள் தங்கள் கையில் உள்ள சிறு ஆயுதத்தையும் பயன்படுத்தி எவ்வாறு பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.
பள்ளி, கல்லுாரிகளில்
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'சமூக குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்பது தான் காவல்துறையின் எண்ணம். அதன் அடிப்படையில் தான் மிஷன் வீரமங்கை திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளில் செயல்படுத்தப்பட்டு, பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இது இருக்கும்' என்றார்.