/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் மகளிர் தின வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் மகளிர் தின வாழ்த்து
ADDED : மார் 08, 2025 03:51 AM
புதுச்சேரி : கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சர்வதேச மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன்
ஆராக்கியமான சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால், அங்கே பெண்கள் உரிமையும், அதிகாரமும், சமூகப் பாதுகாப்பும் பெற்று வாழ வேண்டும். இத்தனை திட்டங்களுக்கு பிறகும், சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் தொடர்ந்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்து, அவர்களுக்கான உரிமைகளை வென்று எடுக்கவும், பாதுகாப்பான வாழ்க்கை சூழலை உருவாக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
முதல்வர் ரங்கசாமி
பெண்கள், கல்வி, விளையாட்டு, அரசியல், தொழில், அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஒரு சமூகத்தின் முன்னேற்றம், அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. 2025ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நாளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அனைத்தையும் துரிதமாக அப்புறப்படுத்துவதற்கான கூட்டு முயற்சியை முன்னெடுக்க நாம் உறுதியேற்க வேண்டும்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி., மற்றும் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.