/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
40 வயதிற்கு மேல் பரிசோதனை அவசியம்; கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
/
40 வயதிற்கு மேல் பரிசோதனை அவசியம்; கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
40 வயதிற்கு மேல் பரிசோதனை அவசியம்; கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
40 வயதிற்கு மேல் பரிசோதனை அவசியம்; கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை
ADDED : மார் 01, 2025 04:06 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சுகாதார திருவிழாவை தொடங்கி வைத்த கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை மக்களிடம் சேர்க்கவும், அனைவருக்கும் அடிப்படை சுகாதார சேவை கிடைக்கவும், சுகாதார திருவிழா நடத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, மூன்று விதமான வளர்ச்சி இலக்குகளை முன் வைக்கிறது. 2030க்குள் வறுமையை ஒழிப்பது, பசி ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஒழிப்பது, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்க்கையை ஏற்படுத்தி தருவது, ஆகியவையாகும். இந்த இலக்கை நோக்கி, மத்திய அரசு பல்வேறு சுகாதார திட்டங்களை கொண்டு வருகிறது.
உயர்தர மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில், தேசிய அளவிலான சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய அளவில், சுகாதார திட்டங்கள் பலவற்றில் முன்னோடி மாநிலமாக புதுச்சேரி செயல்படுகிறது.
சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டாலும், அது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகிறது. சுகாதார திருவிழாவை போன்று, புதுச்சேரியின் மற்ற பகுதிகளிலும் நடத்த வேண்டும்.
அனைவரும், 40 வயதிற்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். கடந்த மாதம், கவர்னர் மாளிகை ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில், ஒரு போலீசாருக்கு சர்க்கரையளவு மிக அதிகமாக இருந்தது.
பின் அவருக்கு ஆலோசனை வழங்கி, சிகிச்சையளிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு மார்பு புற்றுநோய் கண்டறியும் சோதனை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.