/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் கருத்தரங்க உரை ஒளிபரப்பு கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
/
பிரதமரின் கருத்தரங்க உரை ஒளிபரப்பு கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
பிரதமரின் கருத்தரங்க உரை ஒளிபரப்பு கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
பிரதமரின் கருத்தரங்க உரை ஒளிபரப்பு கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
ADDED : மார் 02, 2025 06:56 AM

புதுச்சேரி: பிரதமரின் பட்ஜெட்டிற்கு பிந்தைய கருத்தரங்க உரை நான்கு பிராந்தியங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சார்பில் விவசாயமும் ஊரக வளர்ச்சியும் என்ற தலைப்பில், பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலி கருத்தரங்கம் நடந்தது.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். பிரதமரின் உரை நேரடி நிகழ்ச்சியாக புதுச்சேரி, ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரதமர் இந்தி மொழியில் ஆற்றிய உரையை கவர்னரின் செயலர் மணிகண்டன் பார்வையாளர்களுக்கு தமிழில் விளக்கிக் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பத்தாண்டுகளுக்கு முன் இரண்டு லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த வேளாண் உற்பத்தி தற்போது நான்கு லட்சம் மெட்ரிக் டன்னாக பெருகி இருப்பது குறித்து விளக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேளாண் மற்றும் மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
சபாநாயகர் செல்வம், தலைமைச் செயலர் சரத் சவுகான், மீன்வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார், விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் துறை
இதேபோல் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 20 உழவர் உதவியங்களில் பிரதமரின் உரை காணொலி மூலமாக ஒளிபரப்பப்பட்டது.
வேளாண் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் வேளாண் இயக்குநர் வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குநர் ஜாகீர் உசைன், துணை இயக்குநர் செழியன்பாபு கலந்து கொண்டனர்.
மேலும் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரதமர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.