ADDED : ஆக 20, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர், அரசுமுறைப் பயணமாக டில்லி சென்று பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி கவர்னராக பதவியேற்ற கைலாஷ்நாதன், முதன் முறையாக, அரசு முறைப் பயணமாக நேற்று டில்லிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

