ADDED : மே 04, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : தேத்தாம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் பொறுப்பாசிரியர் குமரன் வரவேற்றார். விழாவில், பள்ளி கல்வித்துறை வட்டம் 5-ன் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், ஜானகிராமன், ஆசிரியர்கள் செந்தில் குமார், மணிமாறன், பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை ஆசிரியைகள் அருள்ஜோதி, கிருபா, உமா செய்திருந்தனர்.