/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பறக்கும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி
/
சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பறக்கும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி
சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பறக்கும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி
சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பறக்கும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி
ADDED : மே 28, 2024 03:41 AM

புதுச்சேரி : சாலைகளில் அதிவேகமாக பறக்கும் சிறுவர்கள்,கல்லுாரி மாணவர்களை குறி வைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையை துவக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி சாலைகளில் லைசென்ஸ் இல்லாமல் பைக்குகளில் பறப்பது அதிகரித்துள்ளது.பைக்கில் நான்கு பேர் வரை அமர்த்திக் கொண்டு போக்குவரத்து நிறைந்த சாலைகளில் கூட மின்னல் வேகத்தில் பஞ்சாய் பறக்கின்றனர்.
அத்துடன் பைக்கில் சாகச பயணம் செய்வது பார்ப்பவர்களை பதற வைக்கின்றனர்.இவர்கள் எதிரே வரும் வாகனத்தை பொருட்படுத்துவதில்லை.
எந்த இடத்திலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை. இதுபோன்ற சிறுவர்,மாணவர்களால் சாலையில் விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ஒதுங்கி ஓட வேண்டியுள்ளது.
இப்படி கல்வி நிறுவனங்கள் நிறைந்த லாஸ்பேட்டை பகுதியில் பஞ்சாய் பறக்கும் மாணவர்களை கிடுக்கிபிடி போட்டு, போலீசார் தணிக்கை செய்து வருகின்றனர்.
மாணவர்களின் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையுயும் சரி பார்த்தனர். அடுத்து நகரம் முழுவதுமே இதேபோல தீவிர வாகன தணிக்கை செய்ய முடிவு செய்துள்ள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு,மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199 ஏ ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக்கு ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு.
தங்களுக்கு ஏதும் தெரியாது; சின்ன பையன் தெரியாமல் செஞ்சுட்டான் என்றாலும் கூறி தப்பித்துவிட முடியாது, லைசென்ஸ் இல்லாத சிறுவன், மாணவர்களுக்கு பைக் கொடுத்தற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்,வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதமும்,3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றனர்.