ADDED : பிப் 28, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உறுவையாறு பாகூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குணவர்ஷினி, 23; எம்.பி.ஏ., முடித்து வீட்டில் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.