/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 12, 2025 07:00 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா மற்றும் முன் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
தலைமையாசிரியர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார்.முன் மழலையர் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் குழு நடனம்,பரத நாட்டியம், தனிப்பாடல், குழு பாடல், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விடுமுறை எடுக்காமல் வந்த பள்ளிக்கு மாணவர்களுக்கும், சிறப்பான கையெழுத்து திறன் கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சாரதா, தேவி, பாக்யஸ்ரீ, சக்தி பிரியா, சபரிநாதன், சந்திர விமலி, ஆனந்தராஜ், ரேவதி, மணிமேகலை, விஜயலட்சுமி, வித்யா, சிவசங்கரி, சிவகுமார், சாமுண்டீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.