/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிம்ஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
பிம்ஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 10, 2024 05:03 AM

புதுச்சேரி: பிம்ஸ் மருத்துவமனை செவிலியர் கல்லுாரியில், மாணவ, மாணவியர்களுக்கானபட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
செவிலியர் கல்லுாரி துணை பதிவாளர் மலர்விழி வரவேற்றார். சேர்மன் அருண்குரியன் ஜோசப் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ரேணு முன்னிலை வகித்தார். செவிலியர் கல்லுாரியின் முதல்வர் அன்னால் ஏஞ்சலின் ஆண்டறிக்கை வாசித்தார்.
சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி மருத்துவமனை செவிலியர் கல்லுாரி முதல்வர் நளினி, 2016-17ம் ஆண்டு இளங்கலை மாணவர்கள், முதுகலை பாடத்தில், 9 மற்றும் 10வது பிரிவு செவிலிய மாணவர்கள், ஆராய்ச்சி பிரிவில்முதல் மற்றும் இரண்டாம் ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார்.
பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் டாக்டர் ஜெய்சங்கரி தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவிகள் புவனேஸ்வரி கவிப்ரியன் சாரா, செரீனா ஆராதனா ஆகியோருக்கு சேர்மன் அருண் குரியன் ஜோசப் பரிசு மற்றும் பதக்கங்களைவழங்கினார். மாணவி ராகவி எம்.எஸ்சி., பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.
விழாவில், நிர்வாக உறுப்பினர் சந்தியா செரியன்,பேராசிரியர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பொது மேலாளர் ஜார்ஜ் தாமஸ், பேராசிரியர்கள் நளினி, ரேணு உள்ளிட்ட பல்வேறு துறை பேராசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செவிலியர் கல்லுாரி உதவி பேராசிரியர் காத்தரீன் நன்றி கூறினார்.