/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபை கூட்டம்
/
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 14, 2024 06:10 AM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 18 கிராம பஞ்சாயத்துகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறையின் அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 18 கிராம பஞ்சாயத்துகளில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15ம் தேதி) காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில், அந்தந்த கிராம பஞ்சாயத்தை சார்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
மேலும், கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 42 கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றி வைத்து 77வது சுதந்திர தின விழாவை கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.