/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி கவர்னர், முதல்வர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி கவர்னர், முதல்வர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 07, 2024 07:02 AM
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தியையொட்டி, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கவர்னர் கைலாஷ்நாதன்:
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய வழிபாட்டு மரபில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமாளின் அருளால் மக்கள் அனைவரும் வளம்பெற வேண்டிக் கொள்வோம். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, வெற்றிகள் சேர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ரங்கசாமி:
அனைத்து கணங்களுக்கும், முழு முதற்பொருளாய் விளங்கும் விநாயக பெருமானை போற்றி வணங்கும், இந்த விநாயகர் சதுர்த்தி திருநாள், அனைவரது வாழ்விலும் வளம், நலம், குணம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களையும், அள்ளித்தருவதாக அமையட்டும்.
ஆனை முகத்தோனின் அருளால், தொட்டது யாவும் துலங்கி, பூரண நல்லாசி பெற்று நீடுழி வாழ, அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
காங்., மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,
விநாயகர், செழிப்பு மற்றும் ஞானத்தின் கடவுள் என, புகழ் பெற்றவர். அவரை வணங்கி தொடங்கினால் வெற்றி நிச்சயம். இந்த நன்னாளில் மக்கள் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கட்டும் என, வாழ்த்துகிறேன்.