/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் மொகரம் வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் மொகரம் வாழ்த்து
ADDED : ஜூலை 17, 2024 06:23 AM
புதுச்சேரி : கவர்னர், முதல்வர் மொகரம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ராதாகிருஷ்ணன்: இஸ்லாமிய சகோதர- சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மொகரம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர் வோடும் வாழ்வதற்கான நம்பிக்கையை இந்த தியாகத் திருநாள் வழங்கட்டும்.
நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி நம் அனைவரது வாழ்விலும், அருளும், மகிழ்ச்சியும் செழிக்க வாழ்வதற்கான புதிய தொடக்கமாக இந்த இஸ்லாமியப் புத்தாண்டு அமைய வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமான மொகரம், அல்லாவின் தயவையும், கருணையையும் பெற சிறப்பு வாய்ந்த மாதமாகவும், தியாகம் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
இறைத்துாதர் நபிகள் நாயகத்தின் போதனைகள் நம் உள்ளத்தில் ஒரு தெளிவான கண்ணாடியை போல அழகாக பிரதிபலித்து, நமது வாழ்க்கைக்கு சரியான பாதையை காட்டுவதை போல, அருள் நிறைந்த இந்த மொகரம், புதிய நம்பிக்கைகளுக்கு நல்ல தொடக்கத்தை காட்டுவதாக அமைய எனது உளம் நிறைந்த மொகரம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.