தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம்


ADDED : ஜூலை 08, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. 

பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பழனி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் பாரதி பாலா வரவேற்றார். 

புதுச்சேரி மாநில இலவச சட்ட உதவிகள் ஆணைய செயலரும், நீதிபதியுமான ரமேஷ் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து, மாணவப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், நற்பண்புகள், குற்றமில்லா புதுச்சேரியை உருவாக்குவதில் மாணவர்களின் கடமைகள் மற்றும் தலைமைப் பண்புகள்  குறித்துப் பேசினார். 

உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார், மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெறுவது குறித்துப் பேசினார். அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, கல்வி, அறிவு, ஒழுக்கம், சுயக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், உயர் கல்வியின் அவசியம் மற்றும் ஆளுமைத் திறன்கள் குறித்துப் பேசினார்.

சிறார் நீதிக்குழுமத்தின் சட்ட நன்னடத்தை அதிகாரி ஜெகதீஷ் சிறுவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்துப் பேசினார். பட்டதாரி ஆசிரியர் கஸ்துாரி தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார். 

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன், பட்டதாரி ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us