UPDATED : மே 26, 2026 07:35 PM
ADDED : மே 26, 2026 07:30 PM

அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்தது.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதனையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து காலை 11.08 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
