தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சித்தானந்த சுவாமி கோவிலில் 189ம் ஆண்டு குரு பூஜை

சித்தானந்த சுவாமி கோவிலில் 189ம் ஆண்டு குரு பூஜை

சித்தானந்த சுவாமி கோவிலில் 189ம் ஆண்டு குரு பூஜை


ADDED : மே 29, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் ஜீவ சமாதி அடைந்த குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை நேற்று நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை கலச பிரதிஷ்டை செய்து கணபதி பூஜையுடன் குரு பூஜை துவங்கி யாகங்கள் நடைபெற்றது. இரவு பூர்ணாஹூதி நடைபெற்றது. நேற்று காலை கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ருத்ர ஜபம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சித்தானந்த சுவாமிக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு உள்ளிட்ட நறுமண பொருட்களால் மகா அபிேஷகம் நடந்தது.

யாக பூஜை நிறைவு பெற்று, பூர்ணாஹூதி முடிந்ததும், கலசம் புறப்பாடாகி சுவாமிகளுக்கு கலசாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் தீபாராதனையும், இரவு அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் தலைமையில், அறங்காவல் குழுவினர் மற்றும் குரு சித்தானந்த சவாமி குரு பூஜை அபிேஷகக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us