ADDED : ஜூன் 05, 2026 08:22 PM
புதுச்சேரி: மரப்பாலம் தனியார் பள்ளி அருகே விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதலியார்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, மரப்பாலம் தனியார் பள்ளி அருகேயுள்ள பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அங்குள்ள கடையில், ஹான்ஸ், கூல்லீப், சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 10,500 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் வானுார், கடப்பேரிக்குப்பம், பழைய தபால் நிலைய வீதியை சேர்ந்த பிரகாஷ், 52; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
