நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீ சார் கைது செய்தனர்.
புதுச்சேரி பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு மிஷன் வீதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
அதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர் கதிர்வேல், 35, என்பவரை கைது செய்து, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.