ADDED : ஜூன் 16, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெட்டிக் கடையில் குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஏனாம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பதாக ஏனாம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அப்பகுதியில், பெட்டிக்கடை ஒன்றில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
கடையில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அதையடுத்து, கடை உரிமையாளர் ஏனாம் பகுதி ராஜிவ் நகரை சேர்ந்த ஸ்ரீசீனிவாஸ், 51, என்பவரை கைது செய்தனர்.