ADDED : ஆக 10, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை அருகே உள்ள சோணாம்பாளையம் பகுதி கடையில் தடைசெய்யப்பட்ட போதை பொருளான குட்கா விற்பனை செய்வதாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். கடையில் குட்கா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 10க்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் அந்தோணி, 76; என்பவரை கைது செய்தனர்.