ADDED : பிப் 28, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழில்பேட்டையில் உள்ள பெட்டி கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக, மேட்டுப் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை செய்த போது, குட்கா பாக்கெட்கள் இருந்தை போலீசார் கண்டு பிடித்தனர்.
இத னையடுத்து, கடை உரிமையாளர் கதிர்காமத்தை சேர்ந்த பிரபு, 36; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

