/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹஜ் பயணம் அனுப்புவதாக மோசடி; டிராவல்ஸ் உரிமையாளர் கைது
/
ஹஜ் பயணம் அனுப்புவதாக மோசடி; டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ஹஜ் பயணம் அனுப்புவதாக மோசடி; டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ஹஜ் பயணம் அனுப்புவதாக மோசடி; டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ADDED : செப் 07, 2024 05:46 AM

காரைக்கால் : காரைக்காலில் ஹஜ் பயணம் அனுப்புவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால், மூன்று கிணற்று பிளாசா தெற்கு வீதியில் 'சகரா' என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் நைனா முகமது, 45. இவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் கடந்த 2019ம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 20க்கு மேற்பட்டவர்களிடம் புனித பயணம் அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் ஹஜ் பயணம் அனுப்பவில்லை என, நைனா முகமதுவிடம் கேட்டு சென்றபோது தலைமறைவானார்.
இந்நிலையில், காரைக்கால், நிரவி முகமது நகரை சேர்ந்த ஹூசைன் பேக் என்பவரை வெளிநாட்டிற்கு அனுப்ப விசா வாங்கி தருவதாக கூறி, 1.25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் ன
ரின் மனைவி அசினா பேகம் நேற்று முன்தினம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில்..கணவர் ஹூசைன் பேக் கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு செல்லுவதற்காக விசா பெற வேண்டிநைனா முகமது என்பவர் பாஸ்போர்ட் வாங்கி தருவதாக கூறி விசா மதிப்பு ரூ.2.20லட்சம் மதிப்பில் ஆகும் என்று நைனா முகமது கூறியதால் செருக செருக ரூ.1.25 லட்சம் ஹூசைன் பேக் பணம் கொடுத்துள்ளார். ஆனால் விசா பெற வேண்டி பலமுறை அவரை தொடர்புக் கொண்ட பொது சரியான பதில்லை பின்னர் பல தவனையாக ரூ.43ஆயிரம் பணம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி ரூ.81,500 நைனா முகமது பணம் கொடுக்கவில்லை இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஹூசைன் பேக் மனைவி அசினா பேகம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஹாஜி பயணம் அனுப்புவதாக கூறிய ஏமாற்றிய 20க்கு மேற்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து நைனா முகம்மதை தேடி வந்த நிலையில் அவர் சென்னையில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. பின்னர் நகர போலீசார் டிராவல்ஸ் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹாஜி பயணம் அனுப்புவதாக கூறி பலரிடம் ரூ.25 லட்சம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் பணத்தை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் விளக்கம்.
காரைக்காலில் ஹாஜி பயணம் அனுப்புவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் நைனா முகம்மதை போலீசார் கைது செய்தனர்.