/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கையேடு
/
அரசு துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கையேடு
ADDED : ஜூலை 09, 2024 04:49 AM

புதுச்சேரி : கருவடிக்குப்பம் அரசு துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அடையாள அட்டை, மாணவர் கையேடு, டவல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை ஆய்வாளர் வட்டம்-1 குலசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பாலமுருகன் மாணவர்களுக்கான அடையாள அட்டை, மாணவர் கையேடு வழங்கினார்.
தினேஷ் மாணவர்களுக்கான டவல், சி.சி.டி.வி., கேமரா வழங்கினார். ஆசிரியை பத்மாவதி பள்ளிக்கு டி.வி., வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நிர்மலா தேவி, விஜயலட்சுமி, பத்மாவதி, கிரிதரணி,சரண்யா, முன் மழலை ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, ஓவிய ஆசிரியர் பழனி, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி அனிதா நன்றி கூறினார்.