ADDED : மே 01, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் செயலாளர் ஓம்சக்தி சேகர், இந்திய கம்யூ., செயலாளர் சலீம், மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம், மக்கள் நீதி மையத்தின் செயலாளர் சந்திரமோகன், பா.ம.க., கணபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.