/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 01, 2024 04:13 AM

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவிகள் நன்கு கல்வி பயின்று அதிகாரமிக்க பதவிகளை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிராமாலாயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிக்கண்ணு மாணவ, மாணவியர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், எதிர் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருளமுதம், புதுமைப்பெண் ஒருங்கிணைப்பாளர் காந்திமதி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.