/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி
ADDED : ஜூலை 08, 2024 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் உதவிகள் வழங்கப் பட்டது.
புதுச்சேரி சொக்கநாதன்பேட்டை, தெற்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் மணிமொழி. இவரது வீடு தீ விபத்தால் எரிந்து சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி, நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் உள்ளிட்ட நிர்வாகிகள, சமையல் செய்ய தேவையான உபகரணங்கள், துணி, உணவு பொருட்கள் வழங்கினர். ரெட்கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் சங்கரநாராயணன், கந்தசாமி, தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.