/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடையை அகற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்
/
சாராயக்கடையை அகற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்
சாராயக்கடையை அகற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்
சாராயக்கடையை அகற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்
ADDED : ஜூன் 29, 2024 12:18 AM

புதுச்சேரி : குருமாம்பேட் குடியிருப்பு மத்தியில் உள்ள சாராயக்கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
குருமாம்பேட், சிவசக்தி நகர் பகுதியில் நுாற்றுக்கும்மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு மத்தியில் தனியாருக்கு சொந்தமான சாராயக்கடை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாராயக்கடைக்கு வரும் நபர்கள் குடித்துவிட்டு வீதிகளில் ஆடைகள் இன்றி படுத்து துாங்குவதாகவும், இரவு நேரத்தில் வீடுகளை தட்டி தண்ணீர், உணவு கேட்டு தொந்தரவு செய்வதாக, முதல்வர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
ஆனால் சாராயக்கடைகள் அகற்றப்படவில்லை. இன்று சிவசக்தி நகரில் உள்ள சாராயக்கடைக்கு ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் சிவசக்தி நகரில் உள்ள சாராயக்கடையை ஏலம் விடக் கூடாது. சாராயக்கடையை அப்புறப்படுத்த கோரி சிவசக்தி நகரில் உள்ள குடியிருப்புகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கோரிக்கை ஏற்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.