தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளிகளுக்கு விடுமுறை ரங்கசாமி அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை ரங்கசாமி அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை ரங்கசாமி அறிவிப்பு


ADDED : செப் 18, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : மின் கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' நடத்தும் நிலையில், முதல்வர் ரங்கசாமி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு, மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, தி.மு.க.,-காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று 'பந்த்' அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், தனியார் பள்ளிகள் பல, விடுமுறை அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று 18 ம் தேதி விடுமுறை என முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை அறிவித்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எதிர்கட்சிகள் நடத்தும் 'பந்த்' காரணமாக ஆட்டோ மற்றும் பஸ்கள் சரிவர இயங்காது. இதனால், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாவர். அதனை தவிர்க்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார்.

பால் 'கட்'

பள்ளிகளில் இன்று காலை மாணவர்களுக்கு பால் வழங்கப்படமாட்டாது என பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



அரசியல் ஆச்சரியம்

அரசை கண்டித்து, எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us