ADDED : மே 12, 2024 05:20 AM

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் ஹோலிபிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி நந்தினி 583 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி மணிமொழி 563 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி சஞ்சனா 554 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவி ஆர்த்தி கம்ப்யூட்டர் சயினஸ் பாடத்திலும், மாணவி நந்தினி எக்னாமிக்ஸ், காமர்ஸ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியளவில் மாணவி சாதனா 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி ராஜேஸ்வரி 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி தமிழ்ஈழம் 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
கணிதத்தில் 4 பேர், சமூக அறிவியலில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பள்ளி நிர்வாகி வெங்கடேசன், பள்ளி இயக்குனர் விஷ்ணுப்பிரியன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
பள்ளி நிர்வாகி வெங்கடேசன் கூறுகையில், 'இந்த வெற்றிக்கு உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்களுக்கு நன்றி' என்றார்.