/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
/
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஜூலை 05, 2024 06:38 AM
புதுச்சேரி : ஊர்க்காவல் படை வீரர் தேர்வு செல்லாது என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில், ஊர்காவல் படை வீரர்கள் எழுத்து தேர்வு கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது.
தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஊர்க்காவல் படை வீரர் தேர்வு செல்லாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சார்பில், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி ஊர்க்காவல் படை என்பது தன்னார்வ அமைப்பு. அந்த அமைப்பு பணியாளர் சீர்த்திருத்த துறையின் கீழ் வராது. பணியாளர் என்ற வரையறையின் கீழ் வராது.தேர்வு நடத்திய பணியாளர் துறைக்கு ஊர்க்காவல் படை தேர்வினை நடத்த அதிகாரம் இல்லை.
ஊர்காவல் படை வீரர் தேர்வும் முறையாக நடத்தப்படவில்லை. அறிவிப்பில் அறிவித்தவாறு கேள்விகள் கேட்கப்படவில்லை. மதிப்பெண்ணும் வழங்கப்படவில்லை. இட ஒதுக்கீடு கடைபிடிக்காமல் சட்ட விரோதமான முறையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிப்பு இல்லாத நிலையில், 15 மதிப்பெண்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. இது போன்று முறையற்ற தேர்வாக நடத்தப்பட்டுள்ளது. எனவே ஊர்க்காவல் படை வீரர் தேர்வினை ரத்து செய்துவிட்டு மறு தேர்வினை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.