/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு
/
வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு
வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு
வீட்டில் சாராயம் விற்றவர் கலால் துறையில் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 25, 2024 04:54 AM
புதுச்சேரி, : வேல்ராம்பட்டில் வீட்டில் மறைத்து வைத்து சாராயம் விற்றவரை, சம்பத் எம்.எல்.ஏ., போலீசுடன் சென்று பிடித்து கலால் துறையில் ஒப்படைத்தார்.
புதுச்சேரியில் 84 சாராய கடைகளில் அரசு அனுமதியுடன் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் கிளை கடை துவக்கி சாராயத்தை விற்பனை செய்கின்றனர். முதலியார்பேட்டையிலும் இதுபோல் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
சம்பத் எம்.எல்.ஏ., முதலியார்பேட்டை போலீசாரை அழைத்து கொண்டு, வேல்ராம்பட்டு சாலை, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடை மற்றும் அருகில் உள்ள வீட்டில் வைத்திருந்த ரூ. 1,200 மதிப்புள்ள சாராய பாட்டில்களை கைப்பற்றி போலீசார் மூலம் கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.
சாராயத்தை வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த வேல்ராம்பட்டு சாலை, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சர்க்கரவர்த்தி, 67; என்பவர் மீது கலால் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.