உள்துறை அமைச்சர் புதுச்சேரி வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
உள்துறை அமைச்சர் புதுச்சேரி வருகை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
ADDED : ஆக 06, 2026 04:21 PM
புதுச்சேரி: மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப்., போலீசார் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் விழா நாளை மறுநாள் (9 ம் தேதி) கோரிமேடு போலீஸ் மைாதனத்தில் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு போலீசாருக்கு விருது வழங்கி உரையாற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (8ம் தேதி) மாலை புதுச்சேரி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழா நடக்கும் கோரிமேடு போலீஸ் மைதானத்தை சுத்தப்படுத்தி, விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்தியமைச்சர் அமித்ஷா புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து, சாலை மார்க்கமாக கடற்கரை சாலை அருகில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு தங்குவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கிருந்து அவர் நாளை மறுநாள் காலை விழா நடக்கும் கோரிமேடு போலீஸ் மைதானம் செல்கிறார். இதனால், விமான நிலையம் முதல், கடற்கரை சாலை மற்றும் அங்கிருந்து கோரிமேடு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி விமான நிலையத்தில், சி.ஆர்.பி.எப்., கமாண்டன்ட் யோகேஷ் புரோகித் தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர், தொடர்ந்து, அங்கு செய்யப்பட்டும் பாதுகாப்பு தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினர்.
