/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறட்டையை கண்டறிய மருத்துவமனையில் ஆய்வகம்
/
குறட்டையை கண்டறிய மருத்துவமனையில் ஆய்வகம்
ADDED : ஆக 20, 2024 04:58 AM
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் குறட்டையை கண்டறியும் ஆய்வகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின் போது, குறட்டை ஏற்படும் பிரச்னையை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதுபற்றி, மருத்துவ கண்காணிப்பாளர் செல்வேள் கூறுகையில், மருத்துமனையில், 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.
மேலும், உறக்கத்தின் போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குறட்டை பிரச்னை உள்ளவர்கள், ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அனுகலாம்.
ஆய்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர், ஸ்டாலின், மருத்துவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.