/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனையில் செவிலியர் பைக் திருட்டு
/
மருத்துவமனையில் செவிலியர் பைக் திருட்டு
ADDED : மே 13, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் 33; இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவனையில், செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இரவு வேலைக்கு சென்ற இவர் பஜாஜ் பல்சர் பைக்கை, பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
பணி முடிந்து மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.