/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டல் ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை
/
ஓட்டல் ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : ஆக 21, 2024 07:45 AM
புதுச்சேரி : விழுப்புரத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது, தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த, சிறுவங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 25; இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தர்மாபுரி - வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்தார். சீட்டு பணம் கட்ட, ஓட்டல் உரிமையாளரிடம் பணம் வாங்கி கொண்டு, விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டு சென்று விட்டு அவர் தங்கியிருந்த தர்மாபுரி, காமராஜர் நகர் அறைக்கு வந்து தங்கினார்.
அவருடன் அறையில் தங்கியிருந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் அறைக்கு வந்தார். அப்போது, அறை கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது, கிருஷ்ணமூர்த்தி துாக்கில் இறந்த நிலையில் தொங்கியது தெரியவந்தது.
புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.