/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயங்கி விழுந்து ஓட்டல் ஊழியர் சாவு
/
மயங்கி விழுந்து ஓட்டல் ஊழியர் சாவு
ADDED : ஜூலை 22, 2024 01:44 AM
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம் தோப்பு தெருவை சேர்ந்தவர் முருகன், 43 சென்னையில் ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி காமாட்சி. மூன்று மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய முருகன் கடந்த வாரம் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தார். ஊருக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து மது அருந்தி வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து காமாட்சி அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.