/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரையாம்புத்துாரில் வீடு புகுந்து திருட்டு
/
கரையாம்புத்துாரில் வீடு புகுந்து திருட்டு
ADDED : பிப் 22, 2025 04:38 AM
பாகூர்: கரையாம்புத்துாரில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த கரையாம்புத்துாரை சேர்ந்தவர் அய்யனார், 35; குப்பை கிடங்கு ஊழியர். இவரது மனைவி ஆனந்தவள்ளி, 32; இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 19ம் தேதி அய்யனார் வேலைக்கு சென்றுவிட்டார். பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றனர். ஆனந்தவள்ளி வீட்டை பூட்டி, சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் மறைத்து வைத்து விட்டு, வயல்வெளிக்கு மாடுகளை ஓட்டிச் சென்றார்.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிள்ளைகள், வந்து பார்த்தபோது, வீட்டின் மரக்கதவு திறந்து கிடந்தது. தாய் ஆனந்தவள்ளிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தார்.
அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த இரும்பு பீரோ மற்றும் சுவர் அலமாரி ஆகியவை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2 கிராம் தங்க கம்மல், 2 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து, ஆனந்தவள்ளி கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்தில் புகாரளித்தார். சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.