/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டித் தருவதாக மோசடி: ஒப்பந்ததாரர் மீது பெண் புகார்
/
வீடு கட்டித் தருவதாக மோசடி: ஒப்பந்ததாரர் மீது பெண் புகார்
வீடு கட்டித் தருவதாக மோசடி: ஒப்பந்ததாரர் மீது பெண் புகார்
வீடு கட்டித் தருவதாக மோசடி: ஒப்பந்ததாரர் மீது பெண் புகார்
ADDED : ஏப் 27, 2024 04:30 AM
அரியாங்குப்பம் : வீடு கட்டுவதற்கு அதிக பணம் வாங்கி மோசடி செய்ததாக ஒப்பந்ததாரர் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அஞ்சலாட்சி, 49. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்கு, வீடு கட்டி கொடுக்கும் ஒப்பந்ததாரர் கருவடிக்குப்பம் சரவணன் நகர் பிரகாஷ் என்பவரை அனுகினார்.
கடந்த 2018ம் ஆண்டு, வீடு கட்டி கொடுக்க மொத்தம் 42 லட்சம் ரூபாய் செலவாகும் என, ஒப்பந்ததாரர், வீட்டு உரிமையாளர் அஞ்சலாட்சியிடம் ஒப்பந்தம் செய்தார்.
அவருக்கு அஞ்சாலாட்சி முன்பணம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரகாஷ் மீது அஞ்சலாட்சி நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காண்ட்ராக்டர் பிரகாஷ், தவணை முறையில் ரூ. 25.50 லட்சம் பணம் பெற்று வீட்டு வேலையை சரியாக முடிக்காமல், ரூ. 15.50 லட்சத்திற்கு மட்டும் வேலை நடந்துள்ளது. மீதம் உள்ள உள்ள ரூ. 10 லட்சத்தை அவரது சொந்த செலவிற்கு பயன்படுத்தி உள்ளார். போலி ஆவணம் தயார் செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.
மீதி பணத்தை கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்த பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

