/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து ரூ. 3.80 லட்சம் தங்க நகைகள் திருட்டு
/
வீடு புகுந்து ரூ. 3.80 லட்சம் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து ரூ. 3.80 லட்சம் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து ரூ. 3.80 லட்சம் தங்க நகைகள் திருட்டு
ADDED : மே 11, 2024 04:58 AM
புதுச்சேரி: வீடு புகுந்து ரூ.3.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் ராமநாதபுரம் மாஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர் சுப்பரமணியன், 62; இவர் மனைவி ராசாத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் அறையில் துாங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை உபாதைக்காக சுப்பரமணியன் எழுந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க தகவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டின் பூஜை அறை திறந்து கிடந்தை கண்டு அங்கு சென்று பார்த்தபோது, வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து பூஜை அறையில் இருந்த 3 சவரன் தங்க செயின், 3 சவரன் தங்க வளையல், இரண்டு கிராம் தங்க காசு உள்ளிட்ட ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுப்பரமணியன் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.