/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பறக்கும் படை வாகன சோதனையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல்
/
பறக்கும் படை வாகன சோதனையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல்
பறக்கும் படை வாகன சோதனையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல்
பறக்கும் படை வாகன சோதனையில் வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல்
ADDED : ஏப் 12, 2024 04:37 AM

நெட்டப்பாக்கம் : சூரமங்கலத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் முன்னிட்டு, மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை மதகடிப்பட்டில் இருந்து சூரமங்கலம் வழியாக 5 லிட்டர் குக்கர் 12, இண்டக் ஷன் அடுப்பு 15, நான் ஸ்டிக் எலக்ட்ரிக் ஸ்டவ் 13, கடாய் 13 என ரூ. 42 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருளை டாடா ஏசி வண்டியில் ஏற்றிக் கொண்டு சூரமங்கலம் வழியாக கரிமாணிக்கம் சென்றது.
அப்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான குழுவினர் டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மடுகரையில் உள்ள கடைக்கு கொண்டு செல்லப்படுவதும், அதற்கான ஆவணங்கள் சரியாக இல்லாததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

