/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய பட்ஜெட் எப்படி? பா.ஜ., இந்திய கம்யூ., 'பளீச்'
/
மத்திய பட்ஜெட் எப்படி? பா.ஜ., இந்திய கம்யூ., 'பளீச்'
மத்திய பட்ஜெட் எப்படி? பா.ஜ., இந்திய கம்யூ., 'பளீச்'
மத்திய பட்ஜெட் எப்படி? பா.ஜ., இந்திய கம்யூ., 'பளீச்'
ADDED : ஜூலை 24, 2024 06:37 AM
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் குறித்து பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., விடுத்துள்ள அறிக்கை:
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான பட்ஜெட்டாகவும் உள்ளது.
வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடுகள், முத்ரா கடன் வழங்கும் திட்டம் பாராட்டக்கூடிய திட்டமாகும். 80 கோடி ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசி 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம். வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வகை செய்யும் திட்டமாகும்.
ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. தங்கம் வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பதால் தங்கம், வெள்ளி விலை குறையும். மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால இந்தியாவுக்கான பட்ஜெட் ஆகும், என கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிறைவேற்றப்படவில்லை. மாணவர்களுக்கு கல்விக்கடனை தள்ளுபடி செய்ய எந்த அறிவிப்பும் இல்லை. விஸ்வகர்மா மேம்பாட்டு சமூக நிதி திட்டம் மனித ஏற்றத்தாழ்வுகளை உறுதி செய்வதாகும்.
ஏழைகள் வாழ்வு மேம்பாட்டிற்காக எந்த திட்டமும் இல்லை. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஒரவஞ்சனை செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் கார்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.